அடுத்த முலிகை

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

HEALTH TIPS



இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள் 


♡ அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டுஇ இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான்.

♡ இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.

♡ முறையற்ற உடற்பயிற்சி.

♡ நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும் போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

♡ எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு.

♡ சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு.

♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்பு வலி வருகிறது.





இடுப்புவலி வராமல் தடுக்கும் முறைகள்



♡ அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.

♡ சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.

♡ கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

♡ அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும்இ மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.

♡ பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

♡ சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.

♡ தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

♡ நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும்இ இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள்.

♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்






♡ அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் இடுப்பு வலி ஏற்படும்.

♡ புகைப் பழக்கத்தை தவிர்த்துவிடுதல் நல்லது.

♡ உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்கக் கூடாது.

- இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல்




உங்கள் உடல் நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட நீங்கள், மற்றவர்களுக்கும் Share செய்து மகிழ்ந்திடுங்கள் !

Post a Comment

1 Comments