மூலிகை தமிழ் மருத்துவம்
எதுவுமே அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு என்பது இதனால் தான்.பலருக்கும் தோல் அலெர்ஜி, கண்கள் சிவத்தல், தோல் தடித்தல் மற்றும் எரிச்சல் போன்ற உணர்வு ஆகியவற்றை உண்டாக்கும் கற்றாழை ஜெல் மீது ஒவ்வாமை உண்டு.
கற்றாழை எனும் மூலப்பொருளுக்கு அறிமுகவே தேவையில்லை. அழகு மற்றும் சுகாதார துறையில், கற்றாழையில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களால் அது ஒரு பெரும் வரம். பச்சை நிற அடர்த்தியான தாவரம் அதனுடைய இலைகளில் நீரைத் தேக்கி, அதை தடித்த மற்றும் ஃப்ளெஷியான பொருள் ஆக்குகிறது. இது கற்றாழை ஜெல் எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் அதன் இலைகளை அறுக்கின்ற போது தோல் மற்றும் முடிகளுக்கு ஆரோக்கியமான ஜெல் கிடைக்கும். இந்த ஜெல்லை குறிப்பிட்ட இடத்தில் உபயோகிப்பதோடு மட்டுமில்லாமல், தொடர்சியாக உட்கொண்டால் அதிகபட்ச பலன்களை அனுபவிக்கலாம். இதில் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், பழமொழியாக கூறுவதைப் போல அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான். கற்றாழை உங்களுடைய உடல், தோல் மற்றும் முடிக்கு ஒத்துப்போகாமல் மேற்கொண்டு பக்க விளைவுகள் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.


0 Comments