அடுத்த முலிகை

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

நாற்பது நாளில் தாதுவிருத்தி அடையசெம்பருத்தி பூ மூலிகை தமிழ்

                                         ஸ்ரீ மூலிகை தமிழ் மருத்துவம்



1) வேறுபெயர்கள்– செம்பரத்தை, ஷுப்ளவர், சீனஹைபிஸ்கஸ்.

2) தாவரப்பெயர்– HIBISCUS ROSASINENSIS.

3) குடும்பம் MALVACEAE.

4) வளரும் தன்மை-எல்லா வகை இடங்களிலும்
நன்றாக வளரும். இது சீன நாட்டிலிருந்து வரப்பெற்ற செம் பருத்தி. அழகுச்செடி எனப் பல தோட்டங்களில் இந்தியா முழுவதிலும் பயிறடப்படுகிறது இது 5-10 அடி உயரம் வரை வளரவல்லது. இதன் இலைகள்பசுமையாகவும் ஓரங்களில் அரிவாள் போன்ற பற்களுடனும் இருக்கும். செம்பரத்தையின் மொட்டுக்கள்சிவப்பு நிறமாக நீண்டு இருக்கும்.விரிந்ததும் ஐந்து இதழ்களை உடையதாகவும் நடுவில் குழல் போன்று மகரந்த தாளையும் கொண்டிருக்கும். இதில் பல வகைகள் உள்ளன. பொதுவாகப் பல அடுக்குகளையுடைய அடுக்குச்செம்பருத்தியையும் காணலாம். துவர்ப்பும்.பசையும் உடைய பூவில் தங்கச்சத்து உள்ளது.இதை இனப்பெருக்கம் செய்ய நன்றாக முதிர்ச்சி அடைந்த அரை அடி நீளமுள்ள தண்டுக் குச்சிகளை நாற்றங் காலில் நட்டு வேர் பிடிக்கச்செய்ய வேண்டும்90நாட்களில் குச்சிகள் வேர்பிடித்துவிடும்.

5)வகைகள் -கோ 1, திலகம் சிகப்பு நிறப்பூக்கள்,கோ 2, புன்னகை, மஞ்சள் நிறப்பூக்கள் , அடி பாகத்தில் சிகப்பு நிறங்கொண்ட மஞ்சள் நிறப் பூக்கள்.

6)பயன்தரும் பாகங்கள் – பூக்கள், இலைகள், பட்டை மற்றும் வேர்கள்.

7)பயன்கள் – செம்பருத்திப்பூ பூஜைக்கு மலராகப்பயன் படுகிறது. சிவந்த நிறமுடைய பூவே சிறந்தபலன் உடையது. இது வெப்பு அகற்றிக் காமம்பெருக்கும் செய்கையுடையது. கூந்தல் வளர்ச்சிக்கு மூலிகை ஷாம்பு தயார்செய்ய பயன்படுகிறது. இது கருப்பை கோளறுகள் உதிரப்போக்கு , இருதய நோய் ரத்தஅழுத்த நோய் குணமடையப் பயன்படும்.

அழலை, இரத்தபித்தம், தாகம்,பேதி, வயிற்றுக்கடுப்பு, விந்துவை நீற்றும், மேகம், விசுசி வேட்டைபோம். தேகவாரேக்கியம், விழியொளியும் உண்டாம்.

செம்பையிலைக்கட்டி, ஜந்நி, தினவு, துடைவாழை,நீர்ரேற்றம், பிளவை, பீநாசங்கள், புண்புரை, மேகம்,வாதகபம், விப்புருதி, விரணம், வீக்கம், வெடித்தபுண், புரைகளும் போம்.

பூவை நீரிட்டுக்காச்சி வடிகட்டிப்பாலும் சர்கரையும்சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதயபலவீனம் தீரும். காப்பி, டீ புகையிலை நீக்கவேண்டும்.

பூவை உலர்த்திப் பொடித்துச் சம எடை மருதம்பட்டைத்தூள் கலந்து பாலில் காலை மாலை பருகஇதயபலவீனம் தீரும்.

பூவை நல்லெண்ணையில் காச்சி தடவ முடி வளரும்.செம்பரத்தை வேர்ப்பட்டை, இலைந்தை மரப்பட்டைமாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4சிட்டிகை காலை மாலை சாப்பிட பெரும் பாடு தீரும்.

செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் நெகிழஅரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப்போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக்கலந்துசிறுதீயில் எரித்துக்குழம்புப் பதமாக்கி (செம்பரத்தைமண்ப்பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக்காலை மாலை சாப்பிட்டு வர உட் சூடு, நீரெருச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல்வீக்கம், நீர்கட்டு ஆகியவை தீரும்.

இந்தப்பூவின் கசாயத்துடன் மான் கொம்பு பற்பம்ஒரு கிராம் அளவு சேர்த்து 10-20 நாள் சாப்பிடஇதயத்துடிப்பு ஒழுங்கு படும். படபடப்புஇருக்காது. குருதி தூய்மையாகும். குருதி மிகுதியாக உற்பத்தியாகும். பாரிச வாய்வும் குணமாகும்.இதன் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம்பாலில் சாப்பிட மலடு நீங்கும்.

தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்குமிகவும் சிறந்ததாகும். நாழும்10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாதுவிருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டிபடும், ஆண்மை எழுச்சி பெறும். உலர்த்திய பூசூரணத்துடன் முருங்கைப்பூ அல்லது விதைஉலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால்ஆண்மை குறைபாடு நீங்கும்……………..இன்பம் நீடிக்கும்.






Post a Comment

0 Comments