அடுத்த முலிகை

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

வெட்டுக்காய்ப் பூண்டு

         மூலிகை தமிழ் மருத்துவம்

        வெட்டுக்காய்ப் பூண்டு

    உயிரியல் வகைப்படும்
           
  தினண: தாவரம்

  தரப்படுத்தப்பாடாத: பூக்கும் தேவாரம்

  தரப்படுத்தப்பாடாத:Eudicots

  தரப்படுத்தப்பாடாத: Astevids

   வரிசை :Asterales

  குடும்பம் :சூரியகாந்திக் குடும்பம் 

  சிற்றினம்: Helian these

   பேரினம்: Trdax

   இணம்: T.Procumbens

   இருசொற் பெயரீடு:Tridax Procumbens


வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான்  (Tridax procumbens) என்பது சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது பரவலாக களைச் செடியாக அறியப்படுகிறது. இது வெப்பமண்டல அமெரிக்காவைச் சேர்ந்த தாவரம் என்றாலும், இது உலகளாவிய வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியுள்ளது. இது அமெரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் களைச் செடியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

பொதுவான பெயர்கள்

இதன் பொதுவான பெயர்கள் ஆங்கிலத்தில் கோட் பட்டன்கள் மற்றும் டிரிடாக்ஸ் டெய்சி, கன்னடத்தில் ஜெயந்தி, எசுப்பானிய மொழியில் காடிலோ சிசாகா, பிரஞ்சு மொழியில் ஹெர்பி கைலி, சமற்கிருதத்தில் ஜெயந்தி வேதம், இந்தியில் கமாரா,  ஒடியா மொழியில் பிஷாலியா கரானி, மராத்தி மொழியில் காம்பர்மொடி, தெலுங்கில் காயபாக்கு, & கட்டி சேமந்தி, தமிழில் வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான், கிணற்றுப்பாசான், வெட்டுக்காயபச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்ததிப்பூண்டு, காயப்பச்சில்லை மற்றும் தென்தமிழகத்தில் பேச்சு வழக்கில் தாத்தாப்பூச்செடி முதலியன சப்பானிய மொழியில் கோட்டோபிகிகிகு, தாய் மொழியில் டின் டூக்கெ என்று அழைக்கப்படுகின்றன.
இலங்கையில் தமிழ் மக்கள் இச் செடியை கோணேசர் மூலிகை என அழைப்பர்.

பயன்கள்

இந்தச் செடியின் இலைகளை வெட்டுக் காயங்களுக்கு தமிழக ஊர்ப்புறங்களில் மருந்தாகப் பயன்படுத்துவர். குழந்தைகள் இதன் பூவை நீண்ட காம்புடன் கொய்து தாத்தா தாத்தா தல குடு என்று சொல்லியபடி கிள்ளி விளையாடுவார்கள். இது புண்ணாற்றும், குறுதியடக்கி, கபநிவாரணி .மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதிமுதலியவை குணமாகும்.

இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.
கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் அலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும். மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.


கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணில் வளரும் ஒரு சிறு செடி. இதன் தாயகம் மத்திய அமரிக்கா. பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறு செடி . ஈரமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது . இலையின் நீளம் 3-6 1.5-3 செ.மீ. தண்டு 5 -10 எம்.எம். நீளம், பூவின்விட்டம் 1.3 1.5 செ.மீ. பூவின் இதழ்கள் 5. நடுவில் வெண்மையாகஇருக்கும். இது தன்மகரந்தச் சேர்க்கையால் விதை உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும். இது சாலை யோரங்களில், தரிசு நிலங்களில், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும் பரவி வளரும். சீதோஸ்ண, மிதசீதோஸ்ண வெப்பத்தில் வளரக்கூடியது. உலகெங்கும்பரவியுள்ளது. லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.





Post a Comment

0 Comments